search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை கைதிகள் பெட்ரோல் பங்க்"

    தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #Edappadipalaniswami #PetrolBunk
    கோவை:

    கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

    சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை, மத்திய சிறை-1 புழல் மற்றும் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்க சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் 22 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து முடிந்ததையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    முதல் விற்பனையை கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடை நம்பி, ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் சுரேஷ், துணை பொது மேலாளர் மானஷ்ரவுத்ராய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் சிறை கைதிகள்.

    தமிழகத்தில் முதல் முறையாக 23 தண்டனை கைதிகளை கொண்டு நடத்தப்படுகிற பெட்ரோல் பங்க் இதுவே ஆகும். இங்கு 3 ஷிப்ட்டுகளில் கைதிகள் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு பெட்ரோல் பங்க் ஊழிர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சிறை துறைக்கு மாதம் ரூ. 43 ஆயிரம் அளிக்கும். மேலும் சிறை கைதிகளுக்கு சம்பளமும் வழங்கும். இந்த பெட்ரோல் பங்கில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட போர்வை, துண்டு, காக்கி துணி மற்றும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏ.டி.எம். வசதியும் உள்ளது. இங்கு 6 பம்பிங் மிஷின்கள் உள்ளது. அடுத்தகட்டமாக பாரதியார் ரோட்டில் சிறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இந்தநிகழ்ச்சியில் சிறைவாசிகள், சிறை பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #Edappadipalaniswami #PetrolBunk
    ×