search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கட்டாய திருமணம்"

    மதுரையில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை திருப்பரங்குன்றம் போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அவனியாபுரம் பூசாரி உடையார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 27). இவருக்கு 16 வயது சிறுமியுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதில் சிறுமிக்கு விருப்பம் இல்லை. இருந்தபோதிலும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக சிறுமி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.

    இதனால் சுரேஷ் குமாருக்கு கடந்த ஆண்டு அந்த சிறுமியுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிறுமி நிறைமாத கர்ப்பிணி ஆனார். அப்போது அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு 17 வயது நடக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இதற்கிடையே குழந்தை பெற்றெடுத்த பிறகும் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சுரேஷ்குமார் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, குழந்தை பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான சுரேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

    சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் பன்னியான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சித்தாழை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சுந்தர் (வயது 30) என்பவருக்கும் இடையே கடந்த 4-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து யூனியன் அலுவலக விரிவாக்க அலுவலர் ராமுத்தாய்க்கு தகவல் கிடைத்தது. அவர் விரைந்து சென்று திருமணமத்தை தடுத்து நிறுத்தி, இரு வீட்டாருக்கும் அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு 11-ந் தேதி சிறுமிக்கும், சுந்தருக்கும் வீட்டிலேயே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக விரிவாக்க அலுவலர் ராமுத் தாய்க்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து அவர், அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தார்.

    மேலும் சுந்தர், அவரது பெற்றோர் கண்ணன்- பணச்செல்வி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ×