search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ெரயில்"

    • தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும்.மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

    இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    • சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ரெயில் இயக்கப்படுகிறது.
    • வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.

    கோவை,

    சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநிலம் நரசாபூர், கேரள மாநிலம் கோட்டயம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து நவம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்:07119) மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.

    நவம்பா் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ெரயில் (எண்: 07120) மறுநாள் மாலை 4 மணிக்கு நரசாபூரை சென்றடையும்.

    இந்த சிறப்பு ெரயிலில், ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி 2, மூன்றடுக்கு பெட்டி 1, படுக்கை வசதி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6, என, 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    ெரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நரசாபூர்-கோட்டயம் ெரயில் வெள்ளி அன்று இரவு 10.12-க்கும், கோட்டயம்-நரசாபூர் ெரயில் சனிக்கிழமை இரவு 10.30-க்கும் கோவை வந்தடையும் .

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை, விருதுநகர் கோவில்பட்டி வழியாக மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில் 4-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    மதுரை

    மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - மைசூரில் இருந்து வருகிற 4, 11, 18-ந் தேதி வரும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 5, 12, 19-ந் தேதி சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×