search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்டுஆலை"

    • ராஜபாளையம் அருகே உள்ள சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வாலிபர் சங்க மாநாடு நடந்தது.
    • மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 17-வது மாநாடு ராஜபாளையத்தில் நடந்தது.

    மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி தொடங்கி வைத்தார். நந்தன் கனகராஜ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி ஆகியோர் பேசினர்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார் நிறைவுரையாற்றினார்.வரவேற்பு குழு பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    ராஜபாளையம் நகரச் செயலாளர் செந்தமிழ் செல்வன், நகர தலைவர் அய்யப்பன், பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராஜபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும், ராஜபாளையத்தில் திட்டப்பணிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிரமங்களில் முக்கியமாக வாகன நெரிசலை முறை ப்படுத்த வேண்டும், செண்பகவல்லி தடுப்பை ணையை சீரமைக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியினை ஏற்படுத்த வேண்டும், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அச்சன்கோவில்- பம்பை ஆறு இணைந்த அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×