search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையை சீரமைக்க வலியுறுத்தல்"

    • இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது.
    • அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நூத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பட்டி பிரிவிலி ருந்து விராலிப்பட்டி வரை சுமார் 3 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள பகுதிகளில் குளத்துப்பட்டி பிரிவை அடுத்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் 3 பாலங்கள் உள்ளது.

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த சாலையை குளத்துப்பட்டி, சீத்தாபுரம், விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சேவுகம்பட்டி, தும்மலப்ப ட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க தற்போது அரசு நிதி ஒதுக்க ப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியில் இருந்து ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு அருகே வரை உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் பல வருடங்களாக சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு குண்டும் குழியுமாக மாறி சாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த சாலையில் உள்ள 600 மீட்டர் தொலைவானது 2 ஒன்றியங்களுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் எந்த ஒன்றியம் அதை பணி மேற்கொள்வது என்ற இழுபறி இருந்து வந்தது. அப்பகுதியில் ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ. க. தேவராஜ் ஆகியோரிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் பழுதடைந்துள்ள சாலையை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடத்தில் தகவல் அளித்து சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் என்பவருக்கு அறிவுறுத்தினர்.

    • 10 ஆண்டுகளாகியும் சாலை அமைக்கவில்லை என புகார்
    • சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்ற கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் கிராம சாலை 1.7 கி.மீ.10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. பின்னர் ஜல்லி மட்டும் போடப்பட்டு, 10 ஆண்டுகளாகியும் தார் சாலையோ சிமெண்ட் சாலையோ அமைக்கவில்லை.

    அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கர் பரப்பில் விளையக்கூடிய வாழை, மஞ்சள், நெல், உள்பட பல்வேறு விவசாய பொருட்களை இச்சாலை வழியாகத்தான் விவசாயிகள் எடுத்துச் சென்று நகரங்களில் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் அவ்வப்போது பெய்யும் மழை, தற்போது மாண்டஸ் புயல் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் குட்டை போல காணப்படுகிறது.

    கல்பட்டு ஊராட்சி சார்பில் இச்சாலையை சீரமைக்க எவ்வித முன்னேற்பாடுகள் செய்யாமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுடைய சாலையில், தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் உள்ள சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகள் ஐந்து வருடங்களாக சீரமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க கலெக்டர் உள்பட போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×