search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை அமைப்பு"

    • நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
    • வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகர் பகுதி நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இதனால் இங்கு எப்போதுமே வாகன போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    ஈரோடு மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி. என்.ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தற்போது மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு–க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

    இந்நிலையில் வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக காணப்படுகிறது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு பெருந்துறை ரோடு நசியனூர் ரோட்டில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.

    இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழியாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பரிந்துரை கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு தார்ரோடுகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    ஆனால் ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் அதனை சுற்றி தார்ரோடு போட்டு சென்று உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் இதேபோன்று 4 இடங்களில் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மின்கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் வாகனங்கள் அதில் உரச வாய்ப்புள்ளது. எனவே அந்த மின் வயர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×