search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சிலை சேதம்"

    • சாமி சிலை சேதம் அடைந்ததை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மலையடிப்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    சுடலை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கோவிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு கிடந்தது.

    இதையறிந்த ஊர்மக்கள் கோவிலில் திரண்டு சேதமடைந்த சாமி சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் தர்மகர்த்தா மலையடிபுதூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (48) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அதே ஊரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கோவிலில் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது. அவர் தான் சாமி சிலையை சேதப்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே சாமி சிலை சேதம் அடைந்ததை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மலையடிப்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுங்குவார்சத்திரம் அருகே 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
    • இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கண்டிவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் அதே கிராமத்தில் இருக்கும் லஷ்மி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவகிராக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்கை சிலைகள், விநாயகர் சிலை உள்பட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி (வயது40) என்பவர் சாமி சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் மதுபோதையில் சாமி சிலைகளை சேதபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ×