search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத் பூஜை"

    • பஞ்சாபில் சிறப்பு ரெயில் நேற்று திடீரென ரத்துசெய்யப்பட்டது.
    • இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்றுகூடி கோஷம் எழுப்பினர்.

    சண்டிகர்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல், வடமாநிலங்களில் வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சாத் பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பஞ்சாப்பில் உள்ள சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாரின் சஹர்சா வரை செல்லும் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், அந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பயணிகள் பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் கற்களை எடுத்து ரெயில் நிலையம் மீதும், சிலர் நிறுத்தியிருந்த பயணிகள் ரெயில்கள் மீதும் வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது.
    • சாத் பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதயசூரியனையும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

    சாத் பண்டிகை பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், சாத் பூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் பண்டிகை சூரியனையும் இயற்கையையும் வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தீபாவளிக்கு பிறகு கொண்டாடப்படும் சாத் பூஜை பூமியில் உயிர்கள் வாழ காரணமாக இருக்கும். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பூஜைகள் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் சாத் பூஜையை பிரமாண்டமாக கொண்டாட அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுகுறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் இந்த ஆண்டு 1,100 இடங்களில் உள்ள நீர் நிலைகளை டெல்லி அரசு மேம்படுத்தும். மேலும் பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்கான செலவை அரசே ஏற்கும். 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவை நகரில் கொண்டாட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூஜையை கொண்டாட தேவையான மின் வசதி, ஆம்புலன்ஸ்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

    ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 69 இடங்களில் ரூ.2.5 கோடி செலவில் மட்டுமே சாத் பூஜை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அரசு நிதி உதவியுடன் 1,100 இடங்களில் சாத் பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படும். டெல்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.

    கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றில் இருந்து விடுவிக்கவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக மக்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விழாவான சாத் பூஜையை பெரும்பாலும் பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே கொண்டாடுகின்றனர்.
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள். 

    இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனா நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். 

    சாத் பூஜையை பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டின் பிற பகுதிகளிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருப்பதால் அந்தந்த மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடுகின்றனர்.

    ×