search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதாரண கூட்டம்"

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுவதாக புகார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கழிப்பிடங்களை இடித்து அப்புறபடுத்திவிட்டு புதியதாக கழிப்பிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசியதாவது:-

    வார்டுகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு வாலாஜா நகராட்சிகுட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். நகராட்சி மார்கெட் பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அப்பள்ளியின் வெளியே கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் இதனால் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தூர்வார வேண்டும்.

    மழைக்காலத்திற்குள் நிலுவையில் உள்ள சாலைகளை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாஜா நகரத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை பேசியதாவது:-

    மோட்டார் சரி செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது. கொசு புகை மருந்து அடிக்கும் மெஷின் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்படும். நகராட்சி பகுதியில் 5 சாலை பணிகள் தான் நிலுவையில் உள்ளது.

    இதனையும் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார்.

    • 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஆ.பூசாராணி கூறினார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஆர்.சரவணன், ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், நேற்று நடைபெற்றது.

    ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முரளி, சந்தியா கோபி ஆகியோர் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து காரசாரமாக பேசினர்.

    இதேபோல், தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

    கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட 26 தீர்மானங்கள், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

    மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடை–பெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்நக–ராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் கருணா–நிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வ–ராஜ், அம்பிகாபதி, ராஜ–மாணிக்கம், ரங்கநாதன், சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்காஆனந்த், சமந்தா பாய், மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர்ராஜகோ–பாலன் பணி மேற்பார்வை–யாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட–னர்.

    கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் வரி போன்ற–வற்றில் ஏலம் எடுத்தவர்கள் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் பாக்கி தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து அதை வசூலிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் பல உறுப்பின–ர்கள் அடிப்படை வசதி–களான தார் சாலை சிமெண்ட் சாலை தெருவிளக்கு உள்ளிட்டவற்றைப் பற்றி கோரிக்கை விடுத்தனர். முடிவில் நகராட்சி மேலா–ளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.

    • மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
    • 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கரூர்

    கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். இதில் துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் மனோகரா கார்னர், ஆர்.எம்.எஸ் அஞ்சல் அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்த அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு அதிகப்படியான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் முன்னிலை வகித்தார். அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் சார்பில் உரிய தீர்வு எட்டப்படும் என பதிலளிக்கப்பட்டது.மேலும் நகராட்சி பகுதியில் நடைபெற்ற, நடைபெற இருக்கின்ற வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து 13 பணிகள் மீது விவாதம் நடைபெற்று 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எதிர் வருகின்ற 8-ந் தேதி வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×