search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் தேர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
    • தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், எர்ரவாரி பாலம், பாக்ரா பேட்டையை சேர்ந்தவர் சுதா கீதா. பாக்ரா பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தேஜா, மகள் ஹாரிகா. தேஜா விசாகப்பட்டினத்தில் உள்ள ஜிஎஸ்டி தணிக்கை துறையில் ஆய்வாளராக வேலை செய்தார். தற்போது சித்தூர் கங்காதர நல்லூர் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார்.

    இந்த நிலையில் தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.

    தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.

    அண்ணன், தங்கை இருவரும் ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும்.
    • இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியராகவும், இதனை தொடர்ந்து, விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள காரணத்தினால் கணவரின் ஒத்துழைப்போடு இவர் கோகோ, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

    இதனால் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்று விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார். இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2020-ம் ஆண்டு பெண் போலீசாக பணியில் இணைந்தார்.

    இவர் தற்போது தெலுங்கானா மாநிலம், முலுகு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தாயைப் போலவே தானும் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டுமென நாகமணியின் மகள் திரிலோகினியும் பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, போலீஸாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடந்தது.

    இதற்கு தாயும், மகளும் ஒன்றாக விண்ணப்பித்தனர். பல நூற்றுக்கணக்கானோருடன் தாயும், மகளும் போட்டி போட்டுக் கொண்டு இதில் பங்கேற்றனர். இதனை அறிந்த பலர் ஆச்சரியப்பட்டனர். இருவரும், உடல் தகுதியில் தேர்வாகிவிட்டனர். நீளம் தாண்டுதல், 800மீ ஓட்டப் பந்தயத்தில் இருவரும் தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

    அடுத்ததாக எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதுகுறித்து நாகமணி கூறும் போது, இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். மகளுடனே போட்டி போடும் நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும். இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது. எவ்வளவு இருந்தாலும் அவள் எனக்கு போட்டியாளர்தான்" என கூறி சிரித்தார்.

    இவர்களில் யார் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்கள்? அல்லது இருவருமே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குத் தேர்வாகி விடுவார்களா? என அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, போலீசாரும் அவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

    • பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள் சுமார் 2.21 லட்சம் பேர் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.
    • போலீஸ் துறையில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களும் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வுக்காக இந்த தேர்வை எழுதினர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள் சுமார் 2.21 லட்சம் பேர் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.

    இவர்களுக்கு முறைப்படி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, கேப்ரன்ஹால்,ஓ.சி.பி.எம் பள்ளிகள் உள்ளிட்ட 20 மையங்களில் 15 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

    பொது அறிவு மற்றும் தமிழ் திறனறிதல் என்ற வகையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்காக இன்று காலை 7 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பகுதியில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் திரண்டனர். அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு அனுமதித்தனர். அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட விதமான பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் போலீஸ் துறையில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களும் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வுக்காக இந்த தேர்வை எழுதினர். நாளையும் எழுத்துத்தேர்வு நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வைக்காக விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.
    • தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 548 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்தத் தேர்வில் திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 1309 ஆண்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1300 பேரும், பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 700 பேரும், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைக்கு பின்னரே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 532 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.ஐ. ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    • சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 7,080 இளைஞர்களும், 1,506 பெண்களும் என 8,586 பேர் தேர்வு எழுதினர்.

    சென்னை:

    தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 8-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டது.

    இந்த தேர்வை எழுத விரும்பிய இளைஞர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.

    இந்த தேர்வின் முதல் கட்டமாக இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத்தேர்வு நடந்தது. மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தேர்வும் நடைபெற உள்ளது.

    26-ந்தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காவல்துறையில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இதில் முதலில் தமிழ் திறனறிதல் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.

    அதில் விண்ணப்பதாரர் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்த எடுத்து கொள்ளப்படும்.

    தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ்.ஐ., தேர்வில் இருந்து நீக்கப்படுவர். இதனால் தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.ஐ. ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இத்தேர்வில் காவல்துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த 13,374 பேர் இத்தேர்வை எழுதினர்.

    இந்த தேர்வை 1,77,221 இளைஞர்கள்,43,949 இளம்பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2,21,213 பேர் எழுதி உள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 39 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 197 பள்ளி, கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்வுக்கூடங்களில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படையான வசதிகளையும் தேர்வாணைய அதிகாரிகளுடன் சேர்ந்து அந்தந்த மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். முக்கியமான அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக தேர்வு மையங்களில் தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன.

    சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 7,080 இளைஞர்களும், 1,506 பெண்களும் என 8,586 பேர் தேர்வு எழுதினர். இதேபோல ஆவடி மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 தேர்வு மையங்களில் 6,994 இளைஞர்களும், 1,499 இளம்பெண்களும் என மொத்தம் 8,493 பேரும், தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையத்தில் உள்ள பகுதியில் 7,704 இளைஞர்களும்,1,516 இளம்பெண்களும் என மொத்தம் 8,590 பேரும் தேர்வை எழுதினார்கள். 444 பணியிடங்களுக்கு பட்டதாரிகள், என்ஜினீயரிங் படித்தவர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு தேர்வு எழுதி உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

    ×