search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் 394 விநாயகர் சிலை"

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகரில் 394 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் நாளை முதல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோவை மாநகரில் 394 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    புறநகர் மாவட்டத்தில் 1,468 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் கோவை குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், பேரூர் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மாநகர போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிலை கரைப்பு நாளில் இரவு நேரம் வரை சிலைகளை கரைக்க வசதியாக அன்றைய தினம் மட்டும் மின் விளக்கு வசதி செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தன்று மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்க்ள.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் ஒரு கட்டு அருகம்புல் ரூ. 20-க்கும், இலை ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 50 கிராம் பொரி கடலை ரூ. 10-க்கும், 200 கிராம் அவல் ரூ. 10, பொரி (1 பக்கா) ரூ. 30, தேங்காய் ரூ. 30, வெற்றிலை (1 கவுலி) ரூ. 60, எலுமிச்சை (3) ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ. 240-க்கும், ரோஸ் ரூ. 280, ஒரு தாமரை பூ ரூ. 20, அரளி ரூ.200, வெள்ளருக்கு மாலை ரூ. 20, ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ. 160, மாதுளை ரூ. 150,சாத்துக்குடி ரூ. 80, திராட்சை ரூ. 120, கொய்யா பழம் ரூ. 80, வாழைக்கன்று ரூ. 30-க்கும் விற்பனையாகிறது.

    விநாயகர் சிலை ரூ. 50 முதல் 2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    ×