search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை இஎஸ்ஐ மருத்துவமனை"

    • அரசு ஆஸ்பத்திரியில் போராட்டம் நடைபெறுவது குறித்து டீன் நிர்மலாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
    • டீன் நிர்மலா விரைந்து வந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோன்று இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்தார்.

    அதன்பின்னர் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:-

    நாங்கள் ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம்.

    இதையடுத்து ரூ.721 வழங்குவதாக கலெக்டர் அறிவித்தார். இதனை ஜனவரி மாதத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2 மாதங்களாகியும் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.

    எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கூலியாக வழங்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் போராட்டம் நடைபெறுவது குறித்து டீன் நிர்மலாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் பணியாளர்கள் உத்தரவாதம் கொடுத்தப்படி தங்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.721-யை உடனடியாக வழங்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.

    ×