search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் யானைகள்"

    • முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் வழங்கப்படும்
    • முகாமின் முடிவில் ஒவ்வொரு யானையும் சுமார் 300 முதல் 400 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த யானைகள் கோவில் விழாக்களில் சாமி சிலைகளை சுமந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இந்த யானைகள் பங்கேற்கின்றன.

    இதில் குருவாயூர் தேவசம்போர்டு சார்பில் உள்ள கோவில்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த யானைகள் மதம் பிடிக்காமல் இருக்கவும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இயல்பாக பழகவும் அவற்றிற்கு ஆண்டுதோறும் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாம் நடத்தப்படும்.

    கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த குருவாயூர் தேவசம்போர்டு முடிவு செய்தது.

    அதன்படி புன்னத்தூரில் குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கி உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்த முகாமுக்கு தேவசம் போர்டு நிர்வாகம் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் வழங்கப்படும். இதுபற்றி கால்நடை மருத்துவ குழுவினர் கூறும்போது, மழை காலத்தில் தான் இந்த முகாம் நடைபெறும். இப்போது மழை காலம் என்பதால் முகாம் தொடங்கி உள்ளது.

    முகாமில் யானைகளுக்கு வைட்டமின் உணவுகள், இரும்பு டானிக், அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளும் அளிக்கப்படும்.

    முகாமின் முடிவில் ஒவ்வொரு யானையும் சுமார் 300 முதல் 400 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும் என்றனர்.

    • கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன.
    • குருவாயூர் தேவஸ்தானத்தின் யானைகள் முகாமில் இதுவரை பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டதில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளில் யானைகள் இடம்பெறுவது வழக்கம்.

    இதற்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன. இதில் குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர்கோட்டை முகாமில் 60-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாகன்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே யானைகளின் பராமரிப்பு மற்றும் அவற்றை பாதுகாப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

    இந்த முகாமில் பெரும்பாலும் ஆண்களே அதிகார பொறுப்பில் இருப்பார்கள். தற்போது முகாமின் நிர்வாக அதிகாரியாக மம்மியூரை சேர்ந்த லெஜூமோள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கேரளாவில் முதல் முறையாக இந்த பொறுப்புக்கு வந்த பெண் இவரே ஆவார்.

    குருவாயூர் தேவஸ்தானத்தின் யானைகள் முகாமில் இதுவரை பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டதில்லை. 47 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த பொறுப்பை பெண் ஒருவர் ஏற்றுள்ளார்.

    இந்த பொறுப்பு கிடைத்தது பற்றி லெஜூ மோள் கூறியதாவது:-

    இந்த பதவிக்கு வந்த முதல் பெண்மணி என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இது பெரிய பொறுப்பு. என்றாலும் எங்கள் குடும்பம் யானைகளை நேசிக்கும் குடும்பம்.

    இங்குள்ள யானைகள் அனைத்தும் கோவில் சடங்குகளில் மட்டுமே கலந்து கொள்ளும். அவற்றை சிறப்பாக பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×