search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் திருவிழா"

    • இந்த திருவிழா 20-ந்தேதி வரை நடக்கிறது.
    • விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ் வார்த்தலும் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி நகர் பெரியார் சிலை அருகே கடை வீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா 20-ந்தேதி வரை நடக்கிறது.

    ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கணபதி ஹோமம் நடந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்றுகாலை மாரியம்மன் கரகம் திருவீதி உலா நடந்தது. பின்னர் விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ் வார்த்தலும் நடந்தது.

    இதையடுத்து நாளை விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

    18-ந்தேதி ஸ்ரீ ஹரிஹரநாத சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேக ஆராதனையும், வெள்ளி கவச சாத்துதலும் நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அம்மன் உற்சவருக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது.

    19-ந்தேதி அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் அலங்காரத்துடன் மஹா கணபதி ேஹாமம், சரஸ்வதி ஹோமமும் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் 504 பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    20-ந்தேதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கரகத்திற்கு மறுபூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலாவும் நடக்கிறது.

    • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
    • 50-க்கும் மேற்பட்டோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த திடீர் நகர் பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்நிலையில் ஆடிமாத தீமிதி திருவிழா கடந்த 5 ம் தேதி தொடங்கியது.இதனையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    மேலும் பக்தர்கள் கூழ் வார்த்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    ஏராளமான அக்கம் பக்கத்து கிராம மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பாரதிமணி, தம்பா, கன்னியப்பன், ஜெயபால் உள்ளிட்டோர் செய்தனர்.

    ×