search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிக்கழிவுகள்"

    • தண்ணீர் இல்லாததால் குட்டை வறண்டு கிடக்கிறது.
    • சாக்கு பைகளில் கட்டி போடப்பட்ட அந்த கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியில் எலந்த குட்டை உள்ளது. கடந்த சில வருடங்களாக தண்ணீர் இல்லாததால் குட்டை வறண்டு கிடக்கிறது. இதனால் குட்டையில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

    இதனை சுத்தம் செய்து குட்டையை மீட்டு தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாசில்தார், பணிக்கம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் குட்டை சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் குட்டையில் மீண்டும் கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். சாக்கு பைகளில் கட்டி போடப்பட்ட அந்த கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே எலந்த குட்டை பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து குட்டையில் கழிவுகளை கொண்டு வந்து போடுபவர்களை கண்டறிந்து,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
    • தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    ×