search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்ட மேலாளர்"

    • பயணிகளுக்கான தங்கும் கூடம் அமைக்கப்படும் என கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்தார்.
    • பாதுகாப்புக்கு உள்ள தமிழக ரெயில்வே போலீசாருக்கு அறை இல்லை என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    தேசிய ரெயில் பயணிகள் சேவைக் குழு உறுப்பினா்கள் கா்நாடகத்தைச் சோ்ந்த சிவராஜ்காந்த்கே, கேரளத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் பரமக்குடியைச் சோ்ந்த பா.ஜ.க. பிரமுகா் பொன்.பாலகணபதி ஆகியோா் ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு ெசய்தனர்.

    சேவைக்குழுவினரிடம் வா்த்தக சங்கம், அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், சென்னைக்கு ராமேசுவரத்தில் இருந்து பகலில் ரெயில், பயணிகளுக்கு கூடுதல் நடைமேம்பாலம், ரெயில் பெட்டிகள் நிற்குமிடம் அறியும் மின்னணு திரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மனு அளித்தாா்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவா் கதிரவன், கோரிக்கை மனு அளித்தாா். அதில் ராமநாதபுரம் நகருக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். உத்தரகோசமங்கை, ஏா்வாடி, திருப்புல்லாணி, தேவிபட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனா். அவா்கள் தங்குவதற்கான வசதி இல்லை. பாதுகாப்புக்கு உள்ள தமிழக ரெயில்வே போலீசாருக்கு அறை இல்லை என்று தெரிவித்தார்.

    அதற்கு பதில் அளித்த, மதுரை ரெயில்வே கோட்ட மேலாளா் வெங்கட்சுப்பிரமணியன், ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடம் அமைக்கப்படும். மேலும், ரெயில் பெட்டி நிறுத்துமிடம் அறியும் மின்னணு திரை அமைக்க 7 முறையும், சிற்றுண்டி அமைக்க பலமுறையும் ஒப்பந்தம் கோரியும் யாரும் வரவில்லை. கூடுதல் ரெயில்களும், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட ரெயில்களும் இயக்கப்படும். சிறிய ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட ரெயில்கள் நின்று செல்லவும், பயணி களுக்கான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

    சேவை குழு உறுப்பினா் பொன்.பாலகணபதி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெயில் பயணிகளுக்கான வசதிகள் அனைத்து நிலையங்களிலும் நிறைவேற்றி தரப்படும் உள்ளூா் பொருள் விற்ப னைக்கான கருவாடு விற்பனை லெமூரியன் மையம் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பா.ஜ.க. நிர்வாகிகள் தரணி முருகேசன், மணிமாறன், வழக்கறிஞர் கணேஷ், பழனி மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனா்.

    ×