search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடியேற்றினார்"

    • ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார்.பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அம்ரித் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று, ஊட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

    சேலம்:

    நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

    பின்னர் சேலம் மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். மேலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி பிரிவு) சார்பாக கொரோனா நோய் தொற்றால் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி, தாட்கோ மூலம் 3 பேருக்கு ரூ.29.84 லட்சம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.10 லட்சம், ஊரக வளர்ச்சி முகமை வளர்ச்சி பிரிவு சார்பில் ரூ.25ஆயிரம் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 26 பயனாளிகளுக்கு நல உதவிகள் என 33 பேருக்கு ரூ.57.19 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிறப்பாக பணிபுரிந்தமைக்காக போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார், அதிகாரிகள் 37 பேருக்கும், எஸ்.பி. அலுவலகத்தில் 29 பேருக்கும், அரசுத்துறை அலுவலர்கள் 41 பேருக்கும் முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் 3 பேருக்கும், தீயணைப்பு துறையினர் 25 பேருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 10 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பள்ளி கல்வித்துறை சார்பில் தேசபக்தி மற்றும் இயற்கையை பாதுகாப்போம் உள்பட மைய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் 1300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் வண்ண மிகு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை வருவாய்த்துறை அலுவலர்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று கவுரவித்தனர். இதில் மாநகர போலீஸ்கமிஷனர் நஜ்மல்ஹோடா, டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், வருவாய் அதிகாரி மேனகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

    ×