search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெறி குண்டு வீச்சு"

    மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குபதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை மிக்க கட்சியாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அசத்தியது.

    கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.

    இதையடுத்து, மாநில பாஜக சார்பில் வெற்றி பேரணி நடத்த முடிவானது. இந்நிலையில், பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை.

    ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் கையெறி குண்டு வீசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #LassiporaPoliceStation #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் லஸ்சிபோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த சில பயங்கரவாதிகள் காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    #LassiporaPoliceStation #MilitantsAttack
    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    ×