search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் விழா"

    • கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
    • வாழப்பாடி பகுதியில் கோவில் விழாவிற்கு காளையுடன் சென்று வீடு வீடாக வரி வசூல் செய்த நிகழ்வு நடைபெற்றது.

    வாழப்பாடி:

    கோவில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், கிராம மக்கள் முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் மாரியம்மன், காளியம்மன், சென்றாயப்பெருமாள், செல்லியம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டத்திற்கு, கோயில் காளைகள் மற்றும் குதிரைகளை அலங்கரித்து தாரை, தப்பட்டை உறுமி மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும் பாரம்பரிய பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தேர்த்திருவிழா நடத்தும் செலவிற்கு பணம் வசூல் செய்வதற்கும் கோவில் காளையை அலங்கரித்து வீடுகள் தோறும் அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வரி தண்டல் செய்து வருகின்றனர்.

    கோவில் காளையுடன் அண்டை கிராமமான வாழப்பாடிக்கு சென்ற மன்னாயக்கன்பட்டி கோயில் நிர்வாகிகள், வாழப்பாடி ஊர் பெரியதனக்காரர்க ளுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், காளையைத் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமும் வரி வசூல் செய்தனர்.

    தேர்த்திருவிழா செலவுக்கு பணம் கொடுப்பது மட்டுமின்றி, காளைக்கு தீவனம் கொடுத்தும், வரி வசூல் செய்பவர்களுக்கு குளிர்பானங்கள், தேநீர், இனிப்பு, பலகாரங்கள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பும் உபசரிப்பும் அளித்தனர். 

    • கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
    • முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் உள்ள கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .

    இதையொட்டி 18-ந் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், பெருபூஜை, கிடாய் வெட்டுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோபி, மொடச்சூர் நாயக்கன் காடு, கரட்டூர் பாரியூர்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    ×