search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேழ்வரகு வெஜிடபிள் இட்லி"

    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    தயிர் - அரை கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
    வெங்காயம் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    நெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×