search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி எம்"

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones

     

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்பட டீசர்களை வெளியிட்டுள்ளது. புதிய டீசர்களில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம் (SM-M105F), கேலக்ஸி எம்20 (SM-M205F) மற்றும் கேலக்ஸி எம்30 (SM-M305F) என்ற மாடல் பெயர்களில் உருவாகி வருகிறது.



    இதுதவிர சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. சாம்சங் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்திருக்கிறது. பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்
    - மாலி G71 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyM #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி, அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகி இருக்கின்றன. 

    இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவன அதிகாரி பேட்டி ஒன்றில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச வெளியீட்டிற்கு முன் இந்தியாவில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.


    புகைப்படம் நன்றி: 91mobiles

    சாம்சங் நிறுவனத்தின் இம்முடிவை பார்க்கும் போது, புதிய ஸ்மார்ட்போன்கள் சியோமிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மூன்றில் இரு காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனம் பின்தங்கியிருந்தது கவுன்டர்பாயின்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மூன்று மாடல்களை அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்வதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #GalaxyM #smartphone



    சாம்சங் நிறுவனம் 2019 புத்தாண்டை புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வுடன் வரவேற்க இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இணையத்தில் அதிகம் லீக் ஆகிவரும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பல்வேறு அம்சங்கள் உலகில் முதல் முறை வழங்கப்படுவதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களில் என்ட்ரி-லெவல் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் முறையே கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஆன் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அமையும் என தெரிகிறது.

    ஜனவரி 2019 நெருங்கி வரும் நிலையில், சாம்சங்கின் நொய்டா தயாரிப்பு ஆலையில் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: Concept

    சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

    ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி எம்50 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியானது. 

    புதிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி எம்1, கேலக்ஸி எம்2, கேலக்ஸி எம்3 மற்றும் கேலக்ஸி எம்5 என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இவற்றில் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தகவல் வெளியானது. 

    கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000, கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் புதிய இன்ஃபினிட்டி யு ரக நாட்ச் வழங்கப்படலாம்.
    ×