search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள சட்டசபை"

    • தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.
    • முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்.

    பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது.

    பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டது.

    இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    கேரளா என்ற பெயரை கேரளம் என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
    • பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்றைய தினம் கேரள சட்டசபை கூடியது. அப்போது மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும். உண்மையான பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசை திருப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சபையில் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
    • தற்போதைய கூட்டத்தொடரை விரைவாக முடிக்க முதல்வர் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவா தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் எதிரே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் போராட்டம் நடத்தினர். சபாநாயகரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். அவர்களை கலைந்துசெல்லும்படி பாதுகாவலர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

    இதையடுத்து எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பாதுகாவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில எம்எல்ஏக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    4 எம்எல்ஏக்களுக்கு காயம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சதீசன் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து சபையில் மறுக்கப்படுவதாகவும், அண்மையில் சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தை ஒத்திவைப்பு தீர்மானமாக முன்வைத்ததை சரியான காரணம் இன்றி சபாநாயகர் நிராகரித்துவிட்டார் என்றும் சதீசன் கூறினார்.

    முதல்வர் பினராயி விஜயனின் அழுத்தத்தின் பேரில் சபாநாயகர் ஏ.என்.ஷம்ஷீர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுகிறார். சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள முதல்வர் பயப்படுகிறார், அதனால் தற்போதைய கூட்டத்தொடரை விரைவாக முடிக்க விரும்புகிறார் என்றும் சதீசன் தெரிவித்தார்.

    • சபையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மந்திரி சஜி செரியனை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஜி செரியன்.

    இவர், சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.

    இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இது பற்றி பேசிய மந்திரி சஜி செரியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் சட்டசபையிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மந்திரி சஜி செரியன், தான் பேசிய கருத்தில் தவறான அர்த்தம் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த காங்கிரசார், மந்திரி சஜி செரியனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி சஜி செரியன் பிரச்சினையை மீண்டும் கிளப்பினர். இது தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சபையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.

    அவர்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் ராஜேஷ் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து சபையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ராஜேஷ் அறிவித்தார்.

    இதையடுத்து சபையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மந்திரி சஜி செரியனை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×