search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள அரசு மனு"

    சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய கேரள அரசின் மனு மீது 8-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு மனு செய்தது.

    இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடுமுறையில் இருக்கிறார்.

    அவர், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பின்னரே இன்று நடக்க இருந்த விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். கேரள அரசின் மனு மீதான விசாரணை 8-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sabarimala

    சபரிமலை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaHighCourt #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.



    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சபரிமலை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை விசாரித்து வரும் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இந்த நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்களுடன் விசாரிக்கும் வகையில், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaGovernment #SupremeCourt 
    ×