search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் பிளஸ்"

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை முன்கூட்டியே நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. #GooglePlus



    கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை முன்கூட்டியே நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக மென்பொருள் டெவலப்பர்களுக்கு கூகுள் பிளஸ் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்திய பிழை இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து கூகுள் பிளஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் 5.25 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதிக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய பிழை தனிப்பட்ட முறையில் ப்ரோஃபைல் விவரங்களை வைத்திருந்த பயனர்களின் விவரங்களையும் ஆப் டெவலப்பர்கள் இயக்க வழி செய்வதாக அமைந்தது.

    ஆப் டெவலப்பர்கள் இந்த விவரங்களை ஆறு நாட்களுக்கு கவனக்குறைவாக வைத்திருந்தனர் என கூகுள் தெரிவித்துள்ளது. வழக்கமான சோதனையின் போது இந்த பிழை கண்டறியப்பட்டு ஒரே வாரத்தில் பிழை சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்தது.



    இதேபோன்ற பிழையை கூகுள் அக்டோபர் மாதத்திலும் கண்டறிந்து தெரிவித்தது. மார்ச் 2018இல் பிழை கண்டறியப்பட்டு, அது உடனடியாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இந்த பிழை பயனர்களின் ப்ரோஃபைல் விவரங்களான பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலை மற்றும் வயது உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியது. இந்த பிழையில் சுமார் ஐந்து லட்சம் அக்கவுன்ட்கள் பாதிக்கப்பட்டன.

    கூகுள் கணினிகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் எதுவும் ஊடுறவவில்லை என்றும், டெவலப்பர்கள் யாரும் பயனர் விவரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

    இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக தனியுரிமை சார்ந்த பிரச்சனையில் கூகுள் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து கூகுள் பிளஸ் சேவை ஏப்ரல் 2019 வாக்கில் நிறுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் சேவையை ஆகஸ்டு 2019இல் நிறுத்துவதாக அறிவித்து இருந்தது. 

    மேலும் அடுத்த 90 நாட்களுக்குள் டெவலப்பர்களுக்கான ஏ.பி.ஐ. சேவை நிறுத்தப்படுகிறது. கூகுள் பிளஸ் குறைந்த அளவு பயன்பாடு கொண்டிருக்கிறது. இதனால் தளத்தை வெற்றிகரமாக நடத்துவதில் பல்வேறு சவால்கள் நிறைந்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
    5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #GooglePlus #Google
    சான்பிரான்சிஸ்கோ:

    ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.



    இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார். ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

    இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், “உபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும்” என்று குறிப்பிட்டார்.

    ‘’பேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனமும், தனது உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #GooglePlus #Google
    கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலால், கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. #GooglePlus #Google
    சான் பிரான்சிஸ்கோ:

    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுள் தேடல் மட்டுமல்லாது, பல்வேறு வகையான வசதிகளையும் நிர்வகித்து வரும் கூகுள், தனது சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை மூடுவதாக நேற்று அறிவித்தது.

    முன்னதாக கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

    500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டியாக கூகுள் பிளஸ் வலைத்தளம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

    கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



    கடந்த மார்ச் மாதத்தில், பாதுகாப்பு தணிக்கைக்குழு வெளியிட்ட தகவல்படி, மென்பொருள் தொழில்நுட்ப பிழை காரணமாக, கூகுள் ப்ளஸ் பயனர்கள், அவர்களது நண்பர்களுடன் மட்டுமே பகிரும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், எந்தெந்த கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 500,000-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.



    இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்ங்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. #GooglePlus #Google

    ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. 

    சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க '@' குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் '+' குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம். 

    பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும். 

    புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ×