search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்"

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் கொடைக்கானலுக்கு ஆப் சீசன் காலமாகும். இந்த மாதத்தில் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.
    • இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது. வழக்கமாக செப்டம்பர் மாதம் கொடைக்கானலுக்கு ஆப் சீசன் காலமாகும். இந்த மாதத்தில் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.

    ஆனால் இந்த வருடம் தொடர் மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக அடுக்கம் சாலையில் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு அங்கு பாதை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    பழனி-கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி சீரமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக கேரளமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்டதாலும், இதமான சூழல் நிலவுவதாலும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா இடங்களையும் கண்டு ரசித்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ேமலும் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல், விடுதி உரிமையாளர்களும், வாடகை டாக்சி டிரைவர்களும், வழிகாட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×