search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு ஆய்வு"

    • அரசு தலைமை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    பழனி:
    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுடமான கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பா, கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் சட்டமன்ற மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு பாலாலாயம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
    • ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி டவுன் கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலாலாயம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

    இந்த நிலையில் முதுநிலை நிபுணர் தட்சிணாமூர்த்தி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை மாநில வல்லுனர் குழுவினர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள சாமி விக்ரகங்கள், சன்னதிகள், பிரகாரங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். கோவில் மூலஸ்தானத்தை உயர்த்துவது தொடர்பாக குழுவினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆய்வின் போது சேலம் மண்டல இணை இயக்குனர் மங்கையர்கரசி, தர்மபுரி ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது. மேலும் கட்டளைதாரர்கள் மூலம் சுற்றுப்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொடைக்கானலில் சட்டமன்ற பேரவை குழுக்கள் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சட்டமன்ற பேரவை குழுக்கள் ஆய்வு

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சட்டமன்ற பொது நிறுவன ங்கள் குழு அதன் தலைவர் ராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டது.

    கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரி , நட்சத்திர ஏரி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. தாட்கோ பயனாளிகளிடம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காதர்பாட்சா, கிருஷ்ணசாமி, தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், மனோகரன், ஜெயக்குமார், ஆகியோர் பங்குபெற்றனர்.

    பின்னர் நிருபர்களுக்கு குழுவின் தலைவர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொடைக்கானலில் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தோம். குறிப்பிட்ட சில மருந்துகள் தனியாரிடமிருந்து பெற்று நோயாளிகளுக்கு நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நட்சத்திர ஏரி மாசுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு–ள்ளது. கொடைக்கானல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் பெண்கள் விடுதி மிக மோசமான நிலையில் உள்ளது. இதை புதுப்பிப்பதற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாட்கோ மூலம் கடன் பெற மனு செய்தவர்களுக்கு உடனடியாக கடன் வழங்குவதற்கு மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் பகுதியில் மெர்குரி தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறை படி தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இங்கு அகற்றப்பட்ட மரங்களை விட கூடுதல் மரங்கள் நடுவதற்கு உத்தரவிட–ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளிட்ட‌ பல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

    ×