search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழாய் உடைந்து ஆறாக ஓடிய காவிரி கூட்டு குடிநீர்"

    • குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 12 அடி உயரத்திற்கு அலைபோல் எழும்பி சாலையில் ஆறாக ஓடியது.

    வடமதுைர:

    திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர்அணை உள்ளது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுகுடிநீர் கொண்டுவரப்படுகிறது.

    காவிரியாற்றில் இருந்து குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை, தாடிக்கொம்பு வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதன்மூலம் ஓரளவு குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் மெத்தனமாக செயல்படுவதால் தாமதமாகவே குழாய் உடைப்பு சரிசெய்யப்படுகிறது.குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 12 அடி உயரத்திற்கு அலைபோல் எழும்பி சாலையில் ஆறாக ஓடியது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியவில்லை. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் ஓரளவு சிரமம்இன்றி பொதுமக்கள் சமாளித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது மழை ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் வீணாக செல்வதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×