search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை வண்டிகளால் ஆபத்து"

    • பழனி பஸ் நிலையத்தில் சாதாரணமாக உலவும் குதிரை வண்டிகளால் ஆபத்து ஏற்படுகிறது.
    • கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இந்த பயணம் சற்று வித்தியாசமாக இருப்பதால் இதில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ்நிலையத்தில் தொடர்ந்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் குதிரை வண்டிகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

    பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி என இல்லாமல் 3 பாதைகளில் எங்கு வேண்டுமானாலும் பஸ்கள் நுழைவதும், வெளியே செல்வதும் தினசரி காட்சிளாக உள்ளன.

    இது போன்ற சமயங்களில் குதிரை வண்டிகள் பஸ்நிலையத்திற்குள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வருகின்றன. குதிரைகளுக்கு திடீரென பஸ் வரும் போது பிரேக் போட்டு வண்டியை நிறுத்த தெரியாது. சில சமயங்களில் குதிரைகள் திமிறி அதிவேகத்தில் செல்லத் தொடங்கும்.

    இதனை குதிரை ஓட்டுபவர்களால் கூட கட்டுபடுத்த முடியாது. எனவே பஸ் நிலையத்திற்குள் குதிரை வண்டிகள் வந்து செல்லும் போது எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    பழனி நகரில் 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் உள்ளூர் பயணிகளை விட கேரளாவைச் சேர்ந்த மக்கள் வரும் போது இதில் ஆர்வமுடன் பயணம் செய்கின்றனர். குறைந்த சுற்றளவு பகுதியிலேயே இந்த வண்டிகள் இயக்கப்படுகின்றன.

    கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இந்த பயணம் சற்று வித்தியாசமாக இருப்பதால் இதில் சவாரி செய்து மகிழ்கின்றனர். இவர்களுக்கு தங்கள் வாகனங்களை நிறுத்த பஸ் நிலையத்தில் வெளிப்புற பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் அவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் பஸ் நிலையத்திற்கு உள்ளேயே செல்கின்றனர்.

    எதிர்பாராத விபத்துக்கள் நடந்தால் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குதிரை வண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×