search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் இணைப்புகள்"

    • வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா்.

    காங்கயம்:

    காங்கயத்தில் அனுமதி பெறாமல் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை கண்டறிவதற்காக நகராட்சி சாா்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    2 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் காங்கயம் நகரத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த 42 குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து அதிகாரிகள் துண்டிப்பு செய்யும் பணியை மேற்கொண்டனா். மேலும் வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியபோது, முறைகேடாக குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கிய ஒப்பந்ததாரா் மீது காவல் துறையில் புகாா் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உரிய அனுமதி இன்றி குடிநீா் இணைப்பு வைத்துள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து, உரிய கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தி இணைப்பை முறைப்படுத்தி கொள்ளவும் என்றாா்.

    • சொத்துவரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
    • செயல் அலுவலர் தகவல்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மேலும் செங்கம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டடங்கள் உள்ளது.

    செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் சொத்து வரி செலுத்தாத உரிமையா ளர்கள் சொத்து வரி செலுத்த பேரூராட்சி சார்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்பட வரி இனங்களை செலுத்தாத வர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் வரி இனங்களை செலுத்தி பேரூராட்சியில் இருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் வரி செலுத்தாதவர்கள் சொத்துக்கள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

    மேலும் நேற்று செங்கம் பகுதியில் வரி இனங்கள் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மேற்பார்வையில் ஊழியர்கள் துண்டித்தனர்.

    • காங்கயம் நகராட்சியில் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது
    • நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் 2020 -ம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொடுத்த கால அவகாசத்தைத் தாண்டியும் இன்னும் நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரில் உடையாா் காலனி, பொன்னி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்த்துக் கொள்ளவும். குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா். குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால், கடந்த ஒரு வாரத்தில் காங்கயம் நகரில் 40 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் நகராட்சி வாடகைதாரர், குத்தகைதாரர் நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட குத்தகை, வாடகை கடைக்காரராகிய நாங்கள் மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில், இப்போது வாடகை தாமதமானால் மாதம் 10-ந் தேதிக்குள் கட்டவில்லை எனில் தண்ட வட்டியாக 18 சதவீதம் வசூலிப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையின்படி எங்களால் வாடகை மட்டுமே செலுத்த முடியும் நிலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம். இந்நிலையில் 18 சதவீதம் தண்ட வட்டியை எங்களால் கட்ட இயலாது. எங்களுக்கு வாடகை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.எனவே பழைய முறையை பின்பற்றி வாடகை வசூலிக்க வேண்டும். புதிய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.

    அவிநாசி:

    நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்த போது 2,000க்கும் மேற்பட்ட அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.கடந்தாண்டு இத்தகைய இணைப்புகளை முறைப்படுத்தும் பணி நடந்தது. ஒரு இணைப்புக்கு 27 ஆயிரத்து 680 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதன் மூலம் ரூ.1.50 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டது.

    இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற நகர்மன்றம் புதிய இணைப்பு கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதுதொடர்பான கள ஆய்வில், நகராட்சிக்கு வரியே செலுத்தாமலும், எவ்வித அனுமதியும் பெறாமல் பலரும் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருப்பது தெரிய வந்தது. பலர், வரி செலுத்தியிருப்பினும் அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

    இத்தகைய முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும், அவற்றை முறைப்படுத்தும் பணியை மேற்கொள்ள பிரத்யேக குழு அமைக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, இத்தகைய முறையற்ற இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக புதிய இணைப்பு கேட்டு, ஏராளமானோர் காத்துள்ளனர். குடியிருப்புகளுக்கு, 6 ஆயிரம் ரூபாய், வணிக பயன்பாட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்து, புதிய இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்கு முன்அனுமதியின்றி, முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களின் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

    இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் முறைப்படுத்தும் கட்டணத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, மீண்டும் புதிய இணைப்புக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு சிலர் பெரும் தொகையை வசூலித்துள்ளதாகவும், புகார் வந்துள்ளது. அவர்கள் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினர். 

    ×