search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாசிக் 350"

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RoyalEnfield #motorcycle



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.1.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 350 சிக்னல்ஸ் எடிஷன் மாடல்களில் ஏ.பி.எஸ். வசதியை அறிமுகம் செய்தது. 

    புதிய கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். யூனிட்டில் டூயல்-சேனல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதே யூனிட் சிக்னல்ஸ் எடிஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் 280எம்.எம். மற்றும் 240எம்.எம். டிஸ்க் பிரேக் முறையே முன்பக்கம் மற்றும் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது.



    ஏ.பி.எஸ். தவிர புதிய மோட்டார்சைக்கிளின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கிளாசிக் 350 ஏ.பி.எஸ். மாடலில் 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 650 ட்வின் மாடல்களிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 650 இன்டர்செப்டார் மற்றும் 650 கான்டினென்டல் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி இருக்கிறது. இந்நிலையில், இதன் விலை ரூ.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். வசதி கிளாசிக் சிக்னல்ஸ் 350 வேரியன்ட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.

    மேம்படுத்தப்பட்ட கிளாசிக் 350 மாடலில் பின்புறம் டிஸ்க் பிரேக் தவிர அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.



    கிளாசிக் 350 மாடலின் முன்புறம் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் மாற்றக்கூடிய டுவின் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 280 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளாக கிளாசிக் சிக்னல்ஸ் 350 இருக்கிறது. சிக்னல்ஸ் எடிஷனில் புதிய நிறங்கள் மற்றும் சிறுசிறு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கிளாசிக் சிக்னல்ஸ் 350 மோட்டார்சைக்கிள் மாடல் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #RoyalEnfield #ClassicSignals



    ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிளாசிக் சிக்னல்ஸ் 350 மோட்டார்சைக்கிள் பிரத்யேக கியர் மற்றும் 40-க்கும் அதிகமான உதிரி பாகங்களுடன் கிடைக்கிறது. 

    அதன்படி பேனியர்கள், ஸ்டீல் இன்ஜி்ன் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்போன் புளு மற்றும் ஸ்டாம்ரைடர் சேன்ட் என இருவித புதிய நிறங்களில் கிடைக்கும் கிளாசிக் சிக்னல்ஸ் இந்திய வான்படையினர் பயன்படுத்தும் யூனிட்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.



    இன்ஜின், சைலன்சர் மற்றும் சக்கரங்கள் டார்க் டான் சீட் உடன் பிளாக் அவுட் செய்யப்பட்ட நிலையில் புதிய கிளாசிக் சிக்னல்ஸ் 350 முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் பயணத்தின் போது கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது.

    கிளாசிக் சிக்னல்ஸ் 350 மோட்டார்சைக்கிள் முன்பதிவு இன்று (ஆகஸ்டு 28) துவங்குகிறது. இந்தியா முழுக்க இயங்கி வரும் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனை மையங்களிலும் முன்பதிவு துவங்கியுள்ளது. 

    புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிக்னல்ஸ் 350 விலை ரூ.1,61,728 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்குகிறது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சீரிஸ் மாடல்களில் இதுவரை பின்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கன்மெட்டல் கிரே மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை இந்தியாவில் ஏபிஎஸ் அம்சம் குறித்து ராயல் என்ஃபீல்டு சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஏப்ரல் 2019-க்குள் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வழங்குவதை இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ஏபிஎஸ் அம்சம் வழங்குவது குறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    பின்புறம் டிஸ்க் பிரேக் மட்டுமின்றி மோட்டார்சைக்கிளில் பின்புரம் ஸ்விங் ஆர்ம் மாற்றப்பட்டுள்ளது. பினபுறம் டிஸ்க் பிரேக் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் வழக்கமான 280 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரின்ட் விலை ரூ.8,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    ×