search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் விடுமுறை"

    எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி மாநிலங்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHolidays
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எம்.பி.க்கள் பலர் பாராளுமன்ற வளாகத்திலும் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மாநிலங்களவை இன்று காலை கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடப்பதை கண்டித்துக் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.


     
    இந்நிலையில், மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஐ டி தொடர்பான அறிவிக்கையை கண்டித்து கோஷங்க்ள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையை சபாநாயகர் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

    வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மாநிலங்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHoliday
    ×