search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணஜெயந்தி விழா"

    • கம்பத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வாலிபர்கள் கழுமரம் ஏறி அசத்தினர்

    கம்பம்:

    கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 3 நாள்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது . இதில் 3-ம் நாளான நேற்று காலை கம்பராயர் பெருமாள் உற்சவர், வேணுகோபாலனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் கோயில் வளாகத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கேடயத்தை யாதவர் சமுதாய தலைவர் சேகர், செயலாளர் குணசீலன், பொருளாளர்கள் மாரியப்பன், சுரேஷ் பேராசிரியர் பாலகிருஷ்ணன் , ஆகியோர் வழங்கினர்.

    விளையாட்டுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், பேச்சுப் போட்டி மற்றும் நடன போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளான போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, தியாகி வெங்கடாச்சலம் தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் வழியாக உலா வந்தார்.

    பின்னர் வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி அதிகாலை வரை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு விழா கமிட்டியினர் பரிசுகளை வழங்கினர்.

    • தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது.
    • கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது. பல்வேறு சமூக த்தினர் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்த னர்.

    மேலும் சாமி பூப்பல்ல க்கில் ஊர்வலமாக வந்தார். அதன்பின்னர் உறியடி, வழுக்கு மரம் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேவதானப்பட்டி இன்ஸ்பெ க்டர் சங்கர் தலைைமயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணா சேகர் மற்றும் விழா கமிட்டி யினர் செய்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×