search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண பிரசாத்"

    • சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர். தமிழில் பன்-டீ, நீ என் பூஜா லட்சுமி மற்றும் ஏராளமான மலையாள படங்களை தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை கர்நாடகா படம் சம்பந்தமான வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்த கிருஷ்ணபிரசாந்தை ஒரு ஆம்னி வேனில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த கரிகாலன், சிவசக்தி, கார்த்திகேயன் ஆகிய கொண்ட கும்பல் கடத்தி கொண்டு வந்தனர்.

    அப்போது ஈரோடு கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வடக்கு பேட்டை என்ற இடத்தில் மடக்கி பிடித்து சினிமா தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்தை அந்த கும்பல் இடமிருந்து மீட்டனர்.

    இதனையடுத்து தயாரிப்பாளரை கடத்திய கரிகாலன், சிவசக்தி கார்த்திகேயனுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த தயா என்கிற கரிகாலன்(45) என்பவருடன் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்துக்கு கடந்த வருடம் முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது கிருஷ்ண பிரசாந்தியிடம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சினிமா படப்பிடிப்புக்கு உகந்த இடமாக உள்ளது என்றும், நீங்கள் வந்து பாருங்கள் என்று கரிகாலன் கூறியுள்ளார்.

    இதனையடுத்து கிருஷ்ண பிரசாத் சத்தியமங்கலத்துக்கு வந்து சினிமா சம்பந்தமான லொகேஷன் பார்த்து உள்ளார். அப்போது கரிகாலன் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி ஆகியோர் தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாந்தை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

    அப்போது கிருஷ்ண பிரசாந்த் உங்கள் 3 பேரையும் நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று அவரிகளிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் ரூ.2.50 லட்சம் வரை தயாரிப்பாளருக்கு செலவு செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரசாந்த் கூறியவாறு அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. மாறாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி அவர்களுக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த அருண் என்பவரை கிருஷ்ண பிரசாந்திடம் நன்கு பழக வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா பட வேலை விஷயமாக கிருஷ்ணபிரசாந்த் கிருஷ்ணகிரி வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கடத்த திட்டம் போட்ட கரிகாலன் கும்பல் அருணை அனுப்பி வைத்து பேச வைத்துள்ளனர்.

    நேற்று மாலை அருண், கிருஷ்ண பிரசாந்திடம் என்னிடம் நல்ல கதை உள்ளது உங்களிடம் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனை யடுத்து இருவரும் கதை சம்பந்தமாக பேசி நடந்து கொண்டிருந்தனர். அப்போது வேனில் வந்த கரிகாலன், கார்த்திகேயன் சிவசக்தி ஆகியோர் கிருஷ்ணபிரசாத்தை கடத்தி கொண்டு சத்தியமங்கலம் வந்த போது நாங்கள் பிடித்துவிட்டோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதனையடுத்து சத்திய மங்கலம் போலீசார் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர்.

    அங்கு தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்திடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். பின்னர் கடத்தல் கும்பல் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் கிருஷ்ணகிரி போலீசார் சத்தியமங்கலம் வந்தனர்.

    அவர்களிடம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி போலீசார் அந்த கடத்தல் கும்பலை விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×