search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் சாலைமறியல்"

    மாரண்டஅள்ளி அருகே சுடுகாடு வசதிகேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே யுள்ள பஞ்சப்பள்ளி பெரியானூரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அருந்ததியின் சமூகத்தை பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    இந்த பகுதி மக்களுக்கு தனி சுடுகாடு வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்கள் வீட்டில் இறப்பு நேர்ந்தால் உடல்களை தங்களுக்கு சொந்தமான நிலங்களிலேயே புதைத்து வந்துள்ளனர். இதுவரை சுமார் 80-க்கும் மேற்பட்ட உடல்களை இவ்வாறு சொந்த நிலங்களிலேயே புதைத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் தற்போது உடல்களை புதைக்க மேற்கொண்டு இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த திருப்பதி என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை புதைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இறந்துபோன திருப்பதியின் சகோதரர் சென்னப்பன் அரசு பஸ் டிரைவராக இருந்து வந்தார். அவர் இந்த நிகழ்ச்சியால் மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இதனால் சென்னப்பன் திடீரென உயிரிழந்தார். இதனால் உடலை புதைக்க இடம் இல்லாமல் தவித்த பொதுமக்கள் இன்று காலை மாரண்டஹள்ளி-பஞ்சப்பள்ளி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அவர்கள் அளித்த உறுதி அளித்தனர். அதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று காலை நடந்த இந்த சாலைமறியல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×