search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரியாற்றில் நீர்வரத்து மேலும் குறைந்தது"

    • ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
    • ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளின் பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

    பென்னாகரம்,

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைக்கேற்ப ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு, 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது.இதனால், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளின் பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

    மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணை நிரம்பியது. அதற்கு மேல் வந்த உபரிநீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.நேற்று காலை, 6:30 மணிக்கு, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, சிறிது நேரத்தில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 55 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதே அளவு நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    ×