search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி"

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 608 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 6 ஆயிரத்து 99 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மொத்தம் 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி குறைந்து வருகிறது. நேற்று 107.79 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 106.73 அடியாக குறைந்தது.

    நீர்வரத்து குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் சரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 2700 கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக-தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம் பாளையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3200 கனஅடியாக இருந்தது. 

    நேற்று காலை நீர்வரத்து 2500 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 2700 கனஅடியாக அதிகரித்தது.

    ×