search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலரா பாதிப்பு"

    • காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தெரிவித்தார்.
    • மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது எனக்கூறிய புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

    ×