search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பகத்தில்"

    • குழந்தை திருமணம் செய்து மீட்கப்பட்டவர்
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி விசாரணை மேற்கொண்டார். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்த தால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி இருளப்ப புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    • பெருந்துறை பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு.
    • பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதை அறிந்த சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அவரிடம் விசாரித்தார்.

    அப்போது அவர் நசியனூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (80) எனவும் டெய்லராக வேலை பார்த்து வந்ததும், இவரது மனைவி இறந்து விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அந்த முதியவரை மீட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர் ஜெயபால் ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    • சத்தியமங்கலத்தில் காப்பகத்தில் தங்கி இருந்த 2 மாணவர்கள் மாயமானர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் அப்துல்பாஷா. இவரது மகன் அப்துல்ரகுமான் (13). இவர் சத்தியமங்கலம் ராஜன்நகரில் உள்ள கஸ்தூரிபா நிகேதன் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதேபோல் ஈரோடு பழைய ெரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் அப்துல்ரசாக் (11). இவரும் அதே காப்பகத்தில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பகத்தை விட்டு வெளியே சென்ற 2 பேரும் பண்ணாரியில் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் 2 பேரும் காப்பகத்தில் இருந்து மீண்டும் மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து காப்பக பொறுப்பாளர் முரளிதரன் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    ×