என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காதலியை மணக்கிறார்
நீங்கள் தேடியது "காதலியை மணக்கிறார்"
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். #SanjuSamson
திருவனந்தபுரம்:
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் 23 வயதான சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் 23 வயதான சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 22-ந்தேதி நடக்கிறது.
காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன், ‘எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமை காத்தேன். எப்போது இந்த புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் நாங்கள் காதலர்களாக இருந்தாலும், பொது இடங்களில் ஒன்றாக சுற்றியது இல்லை. இப்போது இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார். #SanjuSamson
×

X