search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுதை இறைச்சி"

    • ஆந்திர வியாபாரிகள் கழுதைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா பகுதியிலிருந்து கழுதைகளை கடத்தி வருகின்றனர்.
    • கழுதைகள் சட்ட விரோதமாக அறுத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க குண்டூர் ஓங்கோல் பாபட்லா பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கு கடும் கிராக்கி உள்ளது. கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர் மாவட்டங்களில் கழுதை இறைச்சி விரும்பி சாப்பிடப்படுகிறது.

    கழுதை இறைச்சியை சமைத்து சாப்பிட்டால், அது ஆண்மைச்சக்தியை அதிகரிக்கும், அது மட்டுமின்றி முதுகுவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நல்லதொரு நிவாரணம் தரும் என மக்கள் நம்புகிறார்கள்.

    அங்கு கழுதை இறைச்சி ஒரு கிலோ ரூ.600 என விற்பனை செய்யப்படுகிறது.

    இது ஒரு புறம் இருக்க தற்போது கழுதை இறைச்சி சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கழுதை இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் கழுதை இறைச்சி விற்பனை மேலும் அதிகரித்து உள்ளது.

    கழுதைகள் சட்ட விரோதமாக அறுத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க குண்டூர் ஓங்கோல் பாபட்லா பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த பகுதிகளில் 600 கிலோவிற்கு அதிகமான கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இறைச்சிக்காக வெட்ட கொண்டு செல்லப்பட்ட 78 கழுதைகளை மீட்டனர்.

    ஆந்திர வியாபாரிகள் கழுதைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா பகுதியிலிருந்து கழுதைகளை கடத்தி வருகின்றனர்.

    கழுதையை கொன்று, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இதுபோன்று கழுதை இறைச்சியை சாப்பிட்டால், அது உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம்-2006-ன்படி குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் அல்லது இரண்டுமேகூட விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×