search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு பொருட்கள்"

    • இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
    • சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அருமனை, 

    அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி பண்ணைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பன்றி பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது கேரளாவிலிருந்து கழிவு பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் களியல் வழியாக படப்பச்சை பகுதிக்கு பல்வேறு கழிவுகளை ஏற்றி கொண்டுவரப்பட்ட லாரியை பொதுமக்கள் விரட்டி குஞ்சாலுவிளை பகுதியில் வைத்து பிடித்துள்ளனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசாருக்கும், அருமனை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் லாரியில் சோதனையிட்ட போது அதில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து கழிவுகள் அடிக்கடி கொண்டு வருகின்றனர். இதனை சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு வாகனங்கள் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தெங்கம் புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பிடித்தனர். பின்னர் டெம்போ மாநகராட்சி அலுவல கத்திற்கு கொண்டு வரப்ப ட்டது. தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    ×