search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிச்சல் நோய்"

    • பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
    • கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அவ்வகையில், வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை நீடித்தது. அதேநேரம், மழையால் விளையும் பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால் காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பால் கறந்தவுடன் மாடுகளை சிறிது நேரம் கழித்த பின்னரே படுக்க வைக்க வேண்டும்.வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×