search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி மாணவி"

    • மாணவியின் வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சாவுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள், போலீஸ் வாகனங்கள் தீக்கிரையானது. இந்த வழக்கினை சிறப்பு குற்றபுலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று காலை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர் ஆனார். அப்போது செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

    ஆனால் நீதிபதி புஷ்பராணி இந்த வழக்கினை சி.பி.சி.ஐ. டி.போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே அங்கு ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியிடம் ஒப்படைத்தார்.

    • போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்ற மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேர் கைது.
    • சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அந்த சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகி தலைமையில் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் கல்யாணி மருத்துவமனை அருகே திரண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்ய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், மாதர் சங்கத்தினருக்கும் இடையே லேசான மோதல்- தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த மறியல் காரணமாக ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக டி.ஜி.பி. அலுவலகம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட வாசுகி கூறும்போது, போராட்டத்துக்கு வந்த நிர்வாகிகளை வழியிலேயே போலீசார் மடக்கி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

    மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும், போக்சோ சட்டப்பிரிவை வழக்கில் சேர்க்க வேண்டும், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், ஸ்ரீமதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதுடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பினர்
    • தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். கலவரத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், குறிப்பிட்ட ஒரு நபர் மீது உள்நோக்கத்தோடு கருத்துக்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது, வதந்திகளை பரப்புவது என இருந்த 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
    • இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செயதுள்ளது.

    மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.

    இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கூறியிருப்பதாவது:

    பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின்படி, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது.

    மாணவியின் கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், பாடம் படிப்பதில் மாணவிக்கு சிரமம் இருந்தது உறுதியாகி உள்ளது. தற்கொலைக்கு துண்டிய பிரிவில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தவறு. இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை.

    மாணவி மாடியில் இருந்து விழும்போது மரத்தில் அடிப்பட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல, அது வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.

    இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, வழக்கில் திருப்பதை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
    • மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.

    பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
    • மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும், மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

    • திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது.
    • பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் மற்றும் அதன் துணை வாகனம் இரண்டும் கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதிய சேதமடைந்தது.

    பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர்.
    • மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×