search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணையில் தண்ணீர் திறப்பு"

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கோரிகுளம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 28057 கன அடி திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள 20 கண் கல்லணை கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் 5 குளங்களுக்கு செல்லும். தஞ்சை கோரிகுளம், தைக்கால் குளம், மோத்திரப்ப சாவடி குளம், ருக்மணி குளம், நாகை சாலை குளம் ஆகிய 5 குளங்களுக்கு செல்கிறது.

    தற்போது கோரிகுளம் பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை காவிரி தண்ணீர் இங்குள்ள 6 வீடுகளை சூழ்ந்தது. இன்று மதியம் வரை 6 வீடுகளையும் தண்ணீர் சுற்றி சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு வசித்த வந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இன்று இரவுக்குள் இந்த வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்து விடும் என தெரிகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் குளங்கள்- ஏரிகளுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது. #tamilnews
    ×