search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் மாற்றம்"

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.
    • கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13- ந் தேதி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மூணாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 17- ந் தேதி பள்ளிக்கு முன்பு திரண்ட போரா ட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்து, அலுவலகங்கள், தளவாடப் பொருட்கள், மாணவர்கள் சான்றிதழ்கள் ஆகியவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிரச்சனையை சரியாக கையாளாத கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    ×