search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சுந்தரவல்லி"

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் பெண் பாலின பிறப்பு விகிதம் மற்றும் பெண் குழந்தையின் கல்வியினை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் ஒரு சிறப்பு திட்டம் ஆகும்.

    பொது மக்களிடையே குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

    அதன் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    திருத்தணி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி, பழவேற்காடு, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய 12 அரசு ஆஸ்பத்திரிகளில் 30 ஆயிரத்து 416 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டரிடம் கர்ப்பிணிகளை பரிசோதிக்க உரிய கருவிகளை நிறுவி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை மனுவை பொதுமக்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அனுரத்னா உள்பட பலர் பங்கேற்றனர். #tamilnews
    ×