search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சாந்தி தகவல்"

    • மதுபான கடைகள் அரசு அனுமதிக்கப்பட்ட நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும்.
    • அதிக விலைக்கு செய்த 13 கடை ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், சட்ட விரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக வாராந்திர கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அனைத்து மதுக்கடைகளிலும் கண்டிப்பாக விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

    மேலும் அரசு நிர்ணயித்துள்ள அதிக பட்ச சில்லரை விற்பனை விலையை விட அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு செய்த 13 கடை ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மதுக்கடையில் வெளி நபர்களை வைத்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணிவிலக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுபான கடைகள் அரசு அனுமதிக்கப்பட்ட நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும்.

    மதுக்கடைகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தண்ணீர் பாட்டில், டம்ளர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து மது அருந்த அனுமதித்த 13 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

    மேலும் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தாபாக்கள், சந்துகடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை கண்டறிவதற்காக மாவட்ட மேலாளர், காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும்.

    மேலும் பொது மக்கள் மதுபானம் குறித்த புகார்களை 63690 28922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கெம்மன் குட்டை, நல்லாம்பட்டி, பெரியூர் ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது.
    • வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய ஏரி ஒரே வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு 42 ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட உள்ளது.

    இதன்படி பென்னாகரம் தாலுகாவில் மரவத்தி பள்ளம், பள்ளிப்பட்டி, வத்திமரத அள்ளி, வானதி, சித்தாரஅள்ளி, கரியப்பனஅள்ளி, திப்பராசன் குட்டை, எரங்காட்டு ஏரி குட்டை, கெம்மன் குட்டை, நல்லாம்பட்டி, பெரியூர் ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது. தர்மபுரி தாலுகாவில் அன்னசாகரம், குருபரஅள்ளி, குப்பூர், குருமன் குட்டை, சத்திரம், ஆலங்கரை, புதிய ஏரி, மாரவாடி ஆகிய ஏரிகளிலும், நல்லம்பள்ளி தாலுகாவில் மாதேமங்கலம், அதியமான்கோட்டை, லளிகம், ஏலகிரி, சின்ன ஏரி, புட்டன் கொட்டாய், சேஷம்பட்டி, பாப்பன்குட்டை, பாளையத்தாதனூர், கொமத்தம்பட்டி, பொம்மசமுத்திரம், பள்ளப்பட்டி ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர் சான்று இதேபோல் காரிமங்கலம் தாலுகாவில் ஜோதிப்பட்டி, மோட்டூர் ஏரிகளிலும், அரூர் தாலுகாவில் பாப்பன், மோட்டுகுறிச்சி, கொளகன், மயிளன், ஓடசல்பட்டி, கட்டையன், பெரிய ஏரி, கோட்ரப்பட்டி ஆகிய ஏரிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளின் வசிப்பிடம் மற்றும் விவசாய நிலம், வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய ஏரி ஒரே வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

    வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பெற்று சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    புஞ்சை நிலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் எடுக்க இலவசமாக அனுமதி வழங்கப்படும்.

    விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் வண்டல் மண்ணை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெக்கானிக் போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வருகின்ற 24.03.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தனியார்துறை நிறுவனங்களும், தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறு பவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்.

    இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 24.03.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • நேரடி சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    அரூர் அருகே உள்ள ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    வயர்மேன் பிரிவுக்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் - ஏ.சி. டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன அசல் சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும்.

    விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ.245/- ஆகும். பயிற்சி கட்டணம் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைப்பட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும்.

    மேலும் பயிற்சி முடித்த பின் வளாகத் தேர்வு மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்று தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் இயங்கிவரும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரிலோ அல்லது 94434 70656, 94438 23985 மற்றும் 75488 44547 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கில் 90 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டு ரூ.1.04 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
    • முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பணி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கில் 90 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டு ரூ.1.04 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளிலும் இலக்கினை விட கூடுதலாக வசூல் செய்து வழங்கிட அரசுத்துறை அலுவலர்கள் கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்க ளுக்கென தனியாக ஒரு பாலிகிளினிக் மருத்துவ மனை நிறுவிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் என்னென்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும் என்று இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 20 முன்னாள் படைவீரர்க ளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    முன்னதாக, காலை தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சாந்தி கொடிநாள் நிதி அளித்து வசூலை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயக்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ்குமார், கர்னல் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழா நடைபெற்றது.
    • ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வசதி, உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் இதுவரை தொலைத்தொடர்பு சேவையே இல்லாத மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலை த்தொடர்பு கோபுரம் அமைக்க ப்பட்டு, தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று, மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலைத்தொடர்பு கோபுரம் - தொலைத்தொடர்பு சே வையினை தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தர உயர்விற்காகவும் முன்னுரிமை கொடுத்து அரசின் நலத்திட்டங்களும், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைகிராமமான சித்தேரி ஊராட்சியில் உள்ள கலசப்பாடி - அக்கரைகாடு உள்ளிட்ட மலைகிராமங்களில் சாலை வசதிகள், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வசதி, உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இங்கு வாழும் மக்கள் வேறு எங்கு வேண்டு மானாலும் கைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியும், வாய்ப்பும் இந்த சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைகிராம மக்களுக்கு இன்று முதல் கிடைத்துள்ளது. இத்தகைய தொலைத்தொடர்பு சேவையினை அமைத்து கொடுத்த தனியார் (ஜியோ) நிறுவனத்திற்கும், இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு உதவியாகவும், உறு துணையாகவும் இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைக்கிராமமானது வாச்சாத்தியிலிருந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதிகளை கடந்து அரசநத்தம் வழியாக சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வாச்சாத்தியிலிருந்து அரசநத்தம் வழியாக கலசப்பாடி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பதற்கு சுமார் 8 கி.மீ தொலைவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இச்சாலை அமைக்க வனத்துறையின் அனுமதி பெறுவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசில் கோப்பு கடைசி கட்ட நிலையில் உள்ளது.

    அவர்கள் இதுகுறித்து மத்திய வனத்துறையின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு, அனுமதி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். எனவே, வனத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்ற வுடன் இச்சாலை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்ப டும். இதுவரை சாலை வசதியே இல்லாத இந்த மலைக்கிராமத்திற்கு விரைவில் சாலை வசதி அமையும் வாய்ப்பு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கலெக்டர் சாந்தி தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

    தருமபுரி,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், நலத்திட்டங்கள் பெற்று பயன்பெற்ற விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகள் பெற்ற வேளாண் நலத்திட்டங்களின் பயன் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

    பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வேளாண் நலத்திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்களால் பயன்பெற்ற விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: -

    தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மைத்துறையின் மூலம் இதுவரை 94,723 விவசாயிகளுக்கு ரூ.2613.55 இலட்சம் (ரூ.26.14 கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இதுவரை 26,123 விவசாயிகளுக்கு ரூ.4419.06 இலட்சம் (ரூ.44.19 கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் இதுவரை 98 விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.209.14 லட்சம் (ரூ.2.09 கோடி) மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.7,241.75 லட்சம் (ரூ.72.42கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் கருவிகள் வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 1,20,944 விவசாயிகள் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய 3 துறைகளின் மூலம் மட்டும் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ)குணசேகரன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பெருமாள், மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • குழந்தைகளும் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையும் அறிவுரையும் வழங்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட சுகாதார துறை மூலம் தினந்தோறும் 100 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், நடமாடும் மருத்துவகுழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் மூலம் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ குழுவும் தினசரி-4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாம்கள் ஒரே கிராமத்தில் 3 நபர்களுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும், இன்ஃபுளூன்சா, பாதிப்பு அறிகுறி, டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஸ்கிரப்டைபஸ், காய்ச்சல் உள்ள பகுதிகளில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது.

    மேலும், இன்ஃபுளூன்சா காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்டால், மருத்துவர் மூலம் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு தேவைப்படின் உயர் சிகிச்சை பெற அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும், இவர்களை தனிமைப்படுத்தியும், பள்ளி மாணவர் எனில் காய்ச்சல் குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவகுழு மூலம் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊட்டசத்து மையங்களில் உள்ள அனைத்து குழந்தைகளும் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையும் அறிவுரையும் வழங்கப்படுகிறது.

    எனவே, இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் கிராமங்களில் உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து முன் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்;கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்தல், குடிநீர் வினியோக குழாய்களில் உடைப்பு இருப்பின் சரிசெய்தல், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல், முதிர்கொசுவை அழிக்க புகை மருந்து அடித்தல், துப்புறவு பணியாளர்களைக் கொண்டு ஒட்டுமொத்த குப்பை மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றுதல் போன்ற பணிகள் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

    மேலும், இப்பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள சுற்றுபுறப் பகுதிகளில் கொசுபுழுக்கள் வளரா இடமாக உறுதி செய்யப்படுகிறது. மேலும், அனைத்து பள்ளி சத்துணவு கூடங்களுக்கும் புகை மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சிறப்பான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்குமாறும் காய்ச்சல் கண்ட நபர்கள் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மருத்துவர் அறிவுரை இன்றி தானாக மருந்து கடைகளில் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும், கிராம புறங்களில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.
    • சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் நான்காம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப ்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் இக்காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிறப்பு சிகிச்சை பெற்று, நலம் பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று, 5 பயனாளிகளுக்கு பரிசு களையும் வழங்கி பாராட்டி, 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் ரூ.63.97 கோடி மதிப்பீட்டில் 37,217 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்து வமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தருமபுரி மாவட்டத்தில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரையில் 3,36,739 குடும்பங்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) ராஜேஷ்கண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.ராஜ்குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஸ்வரி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • க்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • 38 வது “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்திட கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1928 சிறப்பு முகாம்களில் நாளை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 38 வது "மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும், "மெகா தடுப்பூசி முகாமினை" பயன்படுத்திக்கொண்டு தகுதி உடைய அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 5.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் வருகின்ற 4-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது Voter Helpline APP (VHA) என்ற செயலி மூலமாக தாங்களே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1479 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக 6B படிவம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், "இ சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 5.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 4.9.2022 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காமல் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள 6B படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த 2022-2023 ஆண்டிற்கு 4448 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய வேளாண் மின் இணைப்பு சேவைக்கும், இணையதளம் வாயிலாக பதிவுகள் பெறப்படும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நல்லானூர் ஜெயம் மஹாலில் தருமபுரி மின் பகிர்மான வட்டம் சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு ஒளிமிகு பாரதம் - ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @2047 - விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று பேசும்போது தெரிவித்த தாவது:-

    முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, நம்முடைய தமிழ்நாடு அரசு மின்துறையானது ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய

    மின் இணைப்புகளை

    கடந்த ஓராண்டில் வழங்கியுள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் 6848 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை மிஞ்சி 6927 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் இந்த 2022-2023 ஆண்டிற்கு 4448 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து விவசாய மின் இணைப்புகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும், இந்த தருனத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

    மாநில அளவில், மின்னகம் என்கின்ற, மின் நுகர்வோர் குறை தீர்ப்பு மையம் மூலம் குறைகள் இணையதளம் (online) பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

    இதன்படி மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட "மின்னகம்" மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண்: 9498794987 தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9,72,180 (99%) அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. புதிய வேளாண் மின் இணைப்பு சேவைக்கும், இணையதளம் வாயிலாக பதிவுகள் பெறப்பட்டு, எந்த விதத்திலும், பதிவு மூப்பு விடுபடாமல் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மை யோடு, அந்தப் பதிவுகள் பதியப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் முதலில் இருக்கும் பதிவுதாரர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் பென்னா கரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தருமபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், ஏரியூர் பழனிசாமி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×