search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆகாஷ்"

    • விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
    • விருதுக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.5.2023 ஆகும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான (https://tenkasi.nic.in.) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.5.2023 ஆகும். மேலும் விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் / நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும், கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் இரண்டு குறுவட்டு (சி.டி) பிரதிகளை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
    • குறைகேட்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க் கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    எனவே, ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் ஜனவரி மாதம் 2-வது செவ்வாய்க் கிழமையான வருகிற 10-ந் தேதி தென்காசி, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
    • முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவியர்க ளுக்கான கல்வி உதவித் தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது. அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
    • அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் ஆலங்குளம் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் சாலையின் வடபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.

    இந்த கழிவுநீர் கால்வாய் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைய வேண்டும் என்று ஆலங்குளம் வியா பாரிகள் சங்கம் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து சாலையின் கழிவுநீர் கால்வாய் குறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரைபடம் மூலம் காண்பித்து விளக்கி னார்.

    கோரிக்கையின் முக்கிய த்துவம் குறித்து கலெக்டர் ஆகாஷ் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வின் பொழுது ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, நெல்சன்,தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
    • குறைதீர் கூட்டத்தில் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவியாக தலா ரூ.17ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பணிகாலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் இந்தக் குறைதீர் கூட்டத்தில் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் கலால் ராஜமனோகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர் அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்
    • விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர், நாரணபுரம், திருமலாபுரம், விஸ்வநாதப்பேரி ஆகிய இடங்களில் உள்ள பவுண்டு தொழு, களம் புறம்போக்கு, அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து விஸ்வநாதப்பேரியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், ரேசன் கடை, சுகாதார வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 14 -வது நிதிக்குழு விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். உடன் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் பாலகணேஷ், வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன், யூனியன் பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமி, விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, மக்கள் நல பணியாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது.
    • மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர கோருதல், பட்டாமாறுதல்,மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் ஆக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டியை முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொறுப்பு) முத்து மாத வன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) ராஜ மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.
    • மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.

    அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் மற்றும் 2சதுரங்க கடிகாரங்கள் வாங்குவதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை பயிற்சியாளர் இசக்கியிடம் வழங்கினார்.

    ×