search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பப்பை புற்றுநோய்"

    • கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர், இந்திய பெண்கள்.
    • 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர், இந்திய பெண்கள் ஆவர். ஆண்டுதோறும் 80 ஆயிரம் இந்திய பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர்.

    இதை கருத்தில்கொண்டு, 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    முதல்கட்டமாக, கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2 கோடியே 55 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×