search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு குழு தலைவர் ஆய்வு"

    • நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜோதிமணி பார்வையிட்டார்
    • கோவை மாநகராட்சியில் தற்போது 34 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடம் உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தினையும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தினையும், மக்கும் குப்பைகள் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜோதிமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் துர்நாற்றம் வீசாமல் இருக்க தொடர்ந்து மருந்துகள் அடிக்க வேண்டும். குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் மண் தன்மைக்கு ஏற்ப மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவும், 6 லட்சம் மெட்ரிக் கியூப் பழைய குப்பைகள் அகற்ற உரிய திட்டம் தயாரித்திட மாநகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தினார்.

    இதற்கு முந்தைய ஆய்வின்போது இருந்த பழைய குப்பையின் அளவு தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியினை சுற்றியுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்திட அறிவுரைகள் வழங்கினார்.தெற்கு மண்டலம், ஈச்சனாரி 100-வது வார்டு பகுதியிலுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.

    கோவை மாநகராட்சியில் தற்போது 34 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடம் உள்ளது. தற்பொழுது 12 இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி பகுதியிலேயே கழிவுநீக்கம் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கோவையில் இன்று 2-வது நாளாக கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகிலுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கவுன்சிலர் சாந்தாமணி, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×